Main Menu

இலங்கையின் முதலாவது செய்மதி திங்கட்கிழமை விண்ணில் ஏவப்படுகிறது

இலங்கையின் முதலாவது செய்மதி எதிர்வரும் திங்கட்கிழமை விண்ணுக்கு செலுத்தப்படவுள்ளது. 

இலங்கை தொழில்நுட்பவியலாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது செய்மதியாக இது கருதப்படுவதாக ஆதர் சீ கிளார் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

அது புவியில் இருந்து 400 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள விண்ணுக்கு இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு விண்ணுக்கு செலுத்தப்படவுள்ளது. 

ஜப்பானின் தொழில்நுட்ப உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட இதற்கு ராவணா-வன் என பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும். 

பகிரவும்...