Main Menu

இரஷ்ய-உக்ரைன் யுத்தம் : பிரான்சில் அதிகரித்துள்ள டீசல் விலை

இரஷ்யா உக்ரைன் யுத்தத்தை அடுத்து, பிரான்சில் டீசலின் விலை அதிகரித்துள்ளது.

கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் 14 சதத்தினால் ஒரு லிட்டர் டீசலின் விலை அதிகரித்துள்ளது. தற்போது ஒரு லிட்டர் டீசலின் விலை €1.8831 யூரோக்களாகும். கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் 14 சதம் அதிகமாகும்.

சிறப்பு டீசல் (SP 95) ஒரு லிட்டரின் விலை €1.8889 யூரோக்களுக்கு விற்பனையாகின்றது. (கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் 7 சதத்தினால் அதிகமாகும்.)

இரஷ்யா-உக்ரைன் யுத்தத்தை அடுத்து சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணிகையின் விலை $90 டொலர்களில் இருந்து $140 டொலர்களாக அதிகரித்துள்ளது. கச்சா எண்ணிக்கை உற்பத்தி குறைவடைந்துள்ளதால் இந்த விலை அதிகரிப்பும், தட்டுப்பாடும் நிலவுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...