Main Menu

இனிமேலாவது மதத் துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்!- கறுப்பர் கூட்டத்துக்கு ரஜினி கடும் கண்டனம்

கந்த சஷ்டி கவசத்தை அவதூறு செய்து யூ-ரியூப் தளத்தில் காணொளி வெளியிட்ட கறுப்பர் கூட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிற்றர் பதிவில், “கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட காணொளிகளை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்!

இனிமேலாவது மதத் துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்.. ஒழியணும்!

எல்லா மதமும் சம்மதமே! கந்தனுக்கு அரோகரா!!!” என்று தெரிவித்துள்ளார்.

இந்த அவதூறு சம்பவம் தொடர்பாக கறுப்பர் கூட்டம் யூ-ரியூப் தளத்தில் சர்ச்சைக்குரியதாக இருந்த 500 காணொளிகள் சைபர் குற்றத்தடுப்புப் பொலிஸாரால் நீக்கப்பட்டுள்ளதுடன் குறித்த தளத்தை தடைசெய்யவும் யூ-ரியூப் நிறுவனத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த தளத்தை நடத்தியவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...