Main Menu

ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு மீண்டும் டெஸ்ட் அணியில் சேர அனுமதி!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு, மீண்டும் டெஸ்ட் அணியில் சேர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சவுத்தாம்ப்டனில் இருந்து மன்செஸ்டருக்கு செல்லும் வழியில் அங்கீகரிக்கப்படாத மாற்றுப்பாதையை பயன்படுத்தி உயிர் பாதுகாப்பான நெறிமுறைகளை மீறியதாக ஆர்ச்சருக்கு அபராதம் விதிக்கப்பட்டது மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, ஆர்ச்சர் தனது ஹோட்டல் அறையில் கட்டாயமாக ஐந்து நாள் தனிமையில் தனது நேரத்தை செலவிட்டார் மற்றும் இரண்டு கொவிட்-19 சோதனைகளுக்கு உட்பட்டார். இதன் முடிவு எதிர்மறையாக வந்தது. இதனால் அவருக்கு மீண்டும் அணியில் சேர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆர்ச்சருடன், ஜேம்ஸ் எண்டர்சனும் இரண்டாவது போட்டியில் ஓய்வு பெற்ற பிறகு மீண்டும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளனர்.

அதே நேரத்தில் ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட் மற்றும் சேம் கர்ரன் ஆகியோரும் அணியில் இடம்பெறுவதற்கான போட்டியில் உள்ளனர்.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 24ஆம் திகதி மன்செஸ்டரில் நடைபெறவுள்ளது.

பகிரவும்...