Main Menu

இந்தோனேசியாவை அச்சுறுத்தும் இயற்கை அனர்த்தம் – 21 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜகார்த்தாவில் பெய்த கடும் மழையால் மெகாலோபோலிஸின் பெரும் பகுதிகள் நீரில் முழ்கியுள்ளன.

வெள்ளம் காரணமாக அப்பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டதோடு சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

ரயில் சேவைகள் மற்றும் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வணிக மற்றும் இராணுவ விமானங்களைக் கையாளும் ஹலிம் பெர்தானகுசுமா விமான நிலையத்தின் ஓடுபாதையில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பல விமானங்கள் ஜகார்த்தாவின் பிரதான சோகர்னோ – ஹட்டா சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டன.

பகிரவும்...