Main Menu

இந்தோனேசியாவில் 14 மணி நேர போக்குவரத்து நெரிசல்

இந்தோனேசியாவில் 14 மணிநேரப் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய மக்கள் அது பற்றி சமூக ஊடகங்களில் தகவல் அளித்துள்ளனர்.கடந்த வார இறுதியில் மேற்கு ஜாவாவின் மலையோரப் பகுதியான புன்சாக்கில் (Puncak) அந்தக் கடும் நெரிசல் ஏற்பட்டது.பொது விடுமுறை நாளை முன்னிட்டு நீண்ட வாரயிறுதி வந்தால் மக்கள் நாடு முழுதும் பயணம் மேற்கொள்வது வழக்கம்.அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் வழக்கம்.ஆனால் இம்முறை இதுவரை காணாத அளவுக்குப் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டு அவதிப்பட்டதாகப் பலர் சமூக ஊடங்களில் பதிவிட்டனர்.சிலர் வாகனங்களை இருந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு, சாலையோரம் படுத்து உறங்கும் காட்சிகளும் பதிவாகின.கடந்த திங்கட்கிழமை (16 செப்டம்பர்) மொத்தம் 140,000 வாகனங்கள் புன்சாக் பகுதியைக் கடந்துசென்றன.அங்குள்ள சாலையில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கையைவிட அது ஒரு மடங்கு அதிகம்.