அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ள நடிகர் விஜய்
நடிகர் விஜய் தளபதி 69 படத்திற்காக 275 கோடி இந்திய ரூபாவை சம்பளமாகப் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ள நடிகர் விஜய் ஷாருக்கானின் சாதனையை முறியடித்துள்ளார். ஜவான் திரைப்படத்திற்காக ஷாருக்கான் 250 கோடி இந்திய ரூபாவினை சம்பளமாகப் பெற்றுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதால், அவரின் தளபதி 69வது படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. H.வினோத் இயக்கும் இந்த திரைப்படத்தை KVN நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அதிக பொருட்செலவில் உருவாகும் குறித்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.