Main Menu

இந்திய குடியுரிமை குறித்த மலேசிய பிரதமரின் கருத்து தவறானது – இந்திய வெளியுறவு அமைச்சகம்

இந்திய குடியுரிமை குறித்து மலேசிய பிரதமர் மகாதீர் முகமதுவின் கருத்து தவறானது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மகாதீர் முகமது, குடியுரிமை திருத்த சட்டத்தை சுட்டிக்காட்டி, மதசார்பற்ற நாடான இந்தியா, சில முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறினார்.

அவரின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில்  இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய குடிமக்கள் யாரும் பாதிக்கப்பட மாட்டர் என்றும், எந்த மதத்தினரின் குடியுரிமையும் பறிக்கப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாமென மலேசியாவை வலியுறுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...