Main Menu

கூகுள் மற்றும் அல்பபேட் சிஇஓ சுந்தர் பிச்சையின் சம்பளம் குறித்து அந்நிறுவனம் அறிவிப்பு

கூகுள் மற்றும் அல்பபேட் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு புத்தாண்டில் 2 மில்லியன் டாலர்கள் ஆண்டு சம்பளத்துடன், 240 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பங்குகளும் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

2004ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த சுந்தர் பிச்சை, கூகுள் குரோம் பிரவுசர், கூகுள் டூல்பார் ஆகியவற்றை உருவாக்கிய குழுவுக்கு தலைமை தாங்கியவர்.

2015ஆம் ஆண்டில் கூகுள் சிஇஓ ஆக பதவி உயர்வுபெற்ற சுந்தர் பிச்சை, கூகுளின் தாய் நிறுவனமான அல்பபேட்டின் சிஇஓ ஆகவும் அண்மையில் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், அல்பபேட் நிறுவனம் அமெரிக்க பங்கு சந்தை ஆணையத்திற்கு தெரிவித்துள்ள தகவலில், 2020ஆம் ஆண்டு முதல் சுந்தர் பிச்சைக்கு 2 மில்லியன் டாலர்கள் ஆண்டு சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, 240 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மொத்த தொகையான 242 மில்லியன் டாலர்கள் என்பது, இந்திய மதிப்பில் சுமார் 1700 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...