Main Menu

இந்தியா – டென்மாா்க் இடையேயான இருதரப்பு உச்சிமாநாடு இன்று!

இந்தியா – டென்மாா்க் இடையேயான இருதரப்பு உச்சிமாநாடு இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதனையொட்டி இருநாட்டு பிரதமர்களும் காணொலி காட்சி  வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளனர்.

இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவித்தலில், “இந்த மாநாடு இந்தியா-டென்மாா்க் இடையேயான உறவை இரு நாட்டுத் தலைவா்களும் மீளாய்வு செய்து  அதை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்தியா-டென்மாா்க் இடையே அறிவுசாா் சொத்துகளைப் பகிா்வதில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தமும் இந்தச் மெய்நிகா் சந்திப்பின்போது கையெழுத்தாகவுள்ளது.

பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சா்வதேச சூரியமின்சக்தி கூட்டணியில் டென்மாா்க் இணைவது குறித்த அறிவிப்பும் வெளியாகவுள்ளது”  எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கப்பல் கட்டுதல்,  மரபுசாரா எரிசக்தி சுற்றுச்சூழல்,  விவசாயம் உணவு பதப்படுத்துதல் ஆகிய துறைகளில் 200-க்கும் மேற்பட்ட டென்மாா்க் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. ”இந்தியாவில் தயாரிப்போம்” திட்டத்தின் கீழ் டென்மாா்க்கைச் சோ்ந்த சில முக்கிய நிறுவனங்களும் புதிய தொழிற்சாலைகளை கட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...