Main Menu

இத்தாலிய தீவான சார்டினியாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் மூன்று பேர் உயிரிழப்பு- இருவரைக் காணவில்லை!

இத்தாலிய தீவான சார்டினியாவில் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இருவரைக் காணவில்லை.

இத்தாலியின் நூரோ மாகாணத்தில் உள்ள தீவான சார்டினியாவில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்துவருகின்றது.

இதனால் நூரோவின் பிட்டி நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. வீதி முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளித்தன. மின் மற்றும் இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டன.

மேலும் பாடசாலைகள் மற்றும் பூங்காக்களும் மூடப்பட்டன. தொடர்ந்து அந்தப் பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வியத்தகு காட்சிகள் நூரோ மாகாணத்தின் பிட்டி நகரம் வழியாக மண் ஆறுகள் பாய்கின்றன.

சமீபத்திய நிகழ்வுகள் கிளியோபாட்ரா சூறாவளியை 2013ஆம் ஆண்டு சர்தீனியாவைத் தாக்கி 18பேரின் உயிரைக் கொன்றதை நினைவூட்டுகின்றன.

பகிரவும்...