Main Menu

இங்கிலாந்தில் ஆறுக்கும் மேற்பட்டவர்களின் சமூகக் கூட்டங்களுக்கு தடை!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று அதிகரித்து வருவதற்கு மத்தியில், இங்கிலாந்தில் ஆறுக்கும் மேற்பட்டவர்களின் சமூகக் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 14ஆம் திகதி முதல் இந்த சட்ட மாற்றம் நடைமுறைக்கு வருமென அரசாங்கம் அறிவித்துள்ளது.

பெரிய குழுக்கள் சமூக ரீதியாக அல்லது வெளியில் எங்கும் சந்திப்பதை தடை செய்யும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆனால், இது பாடசாலைகள், பணியிடங்கள் அல்லது கொவிட்- 19 பாதுகாப்பான திருமணங்கள், இறுதி சடங்குகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குழு விளையாட்டுகளுக்கு பொருந்தாது.

மக்கள் இணங்கத் தவறினால் 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும். ஒவ்வொரு குற்றத்திற்கும் அதிகபட்சமாக 3,200 பவுண்டுகள் வரை விதிக்கப்படலாம்.

ஜூலை மாத இறுதியில் இங்கிலாந்தில் கொரோனா நாளொன்றுக்கான கொவிட்-19 பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழே இருந்த நிலையில் கடந்த சில தினங்களாக இரண்டாயிரத்தை கடந்து வருவதால் அரசாங்கம் இம்முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பகிரவும்...