Main Menu

ஆளுநர், துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை

ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை சௌந்தரராஜன். தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன். இதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார் தமிழிசை சௌந்தர்ராஜன். இதனால் அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ளாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் வரிசையாக பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. முன்பே 195 வேட்பாளர்களின் பட்டியலை பாஜக முதல் கட்டமாக அறிவித்தது. இந்தப் பட்டியலில், மூன்றாவது முறையாக வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குஜராத்தின் காந்திநகரில் மீண்டும் களமிறங்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோவிலும், ஸ்மிருதி இரானி அமேதியிலும் போட்டியிடுவார்கள், ஸ்மிருதி இரானி 2019 இல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக அசத்தல் வெற்றியைப் பெற்றார். ராஜஸ்தானின் கோட்டாவில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 28 பெண்கள், 50 வயதுக்குட்பட்ட 47 தலைவர்கள், ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த 57 பேர் என 34 மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் இரண்டு முன்னாள் முதல்வர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 195 பேரில், 51 பேர் அனைத்து முக்கியமான மாநிலமான உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், 20 பேர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஐந்து பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள்.

இரண்டாம் கட்ட லிஸ்ட்: இது போக 2024 மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாவது வேட்பாளர் பட்டியலை மார்ச் 13 அன்று வெளியிட்டது. அனுராக் தாக்கூர், ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், பசவராஜ் பொம்மை, பியூஷ் கோயல், அனில் பலுனி உள்ளிட்ட 72 வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது.

அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் தேஜஸ்வி சூர்யா பெங்களூரு தெற்கு தொகுதியிலும், கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை ஹாவேரி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூரில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். விரைவில் தமிழ்நாடு: இந்த நிலையில்தான் விரைவில் தமிழ்நாட்டின் வேட்பாளர் பட்டியலை 2 – 3 நாட்களில் பாஜக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு இடையே ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறார் தமிழிசை சௌந்தரராஜன். தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறார் தமிழிசை சௌந்தரராஜன். இதனால் எங்கே அவர் வேட்பாளராக களமிறக்கப்டுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆக்டிவ் அரசியலில் பாஜக தலைவராக இருந்த தமிழிசை 8 செப்டம்பர் 2019 அன்று தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன்பின் 18 பிப்ரவரி 2021 அன்று தமிழிசை புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில்தான் தமிழிசை சௌந்தரராஜன் பாஜக வேட்பாளராக மீண்டும் களமிறக்கப்படுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் இவர் தூத்துக்குடியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அங்கே கனிமொழி 563,143 வாக்குகள் பெற்று வென்றார். அதே சமயம் தமிழிசை 215,934 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இந்த நிலையில்தான் ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறார் தமிழிசை சௌந்தரராஜன். தூத்துக்குடி அல்லது தென் சென்னை அல்லது நெல்லை அல்லது புதுச்சேரியில் இருந்து பாஜக வேட்பாளராக இவர் களமிறங்குகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

பகிரவும்...