Main Menu

ஆப்கானிஸ்தானில் 3 ஆயிரம் லிட்டர் மதுபானத்தை கால்வாயில் ஊற்றி அழித்த தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கைப்பற்றப்பட்ட 3ஆயிரம் லிட்டர் மதுபானத்தை அங்குள்ள கால்வாயில் ஊற்றி அழித்தனர், இது தொடர்பான வீடியோக்களையும் அவர்கள் வெளியிட்டு உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இதனால் அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அங்கு மது குடிக்கவும், மது விற்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் போதை பொருட்கள் கடத்தலை தடுக்கவும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தலைநகர் காபூலில் மதுபானங்கள் பதுக்கி வைத்து இருப்பதாக உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு இடத்தில் பேரல் ,பேரலாக மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

உடனே 3 ஆயிரம் லிட்டர் மதுபானங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் தலிபான்கள் கைப்பற்றப்பட்ட 3ஆயிரம் லிட்டர் மதுபானத்தை அங்குள்ள கால்வாயில் ஊற்றி அழித்தனர், இது தொடர்பான வீடியோக்களையும் அவர்கள் வெளியிட்டு உள்ளனர்.

பகிரவும்...