Main Menu

பிரான்சில் நடைமுறைக்கு வரும் புதிய விதிகள்

இன்று ஜனவரி 3 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் பல்வேறு சுகாதார விதிகள் நடைமுறைக்கு வருகின்றது.

முகக்கவசம்!
இன்று முதல் 6 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்கள், போக்குவரத்துக்கள் உள்ளிட்ட பல இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். தவறினால் 135 யூரோக்கள் குற்றப்பணம் செலுத்த நேரிடும்.

வீட்டில் இருந்து வேலை!
இன்று முதல் வாரத்தில் மூன்று நாட்கள் கட்டாயமாக வீட்டில் இருந்து வேலை (télétravail) வசதியை ஊழியர்களுக்கு ஏற்படுத்தி தரவேண்டும்.

நின்றுகொண்டு உணவருந்த தடை!
உணவகங்கள், மதுபான விடுதிகள் மற்றும் அருந்தகங்களில் நின்றுகொண்டு உணவருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பொதுபோக்குவரத்துக்களில் பயணம் செய்யும் போது, திரையரங்குகள், நாடக அரங்குகள் அல்லது நிகழ்ச்சிகளின் போதும் உணவு அருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒன்றுகூட தடை!
இன்று முதல் வெளிப்புற அரங்குகளில் 5,000 பேருக்கு மேல் மற்றும் உள்ளக அரங்குகளில் 2,000 பேருக்கு மேல் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன. 

பகிரவும்...