Main Menu

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 15 தலிபான் தீவிரவாதிகள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 15 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்தஹர் மாகாணத்தில் தலிபான்களுக்கு எதிராக ஆப்கான் பாதுகாப்புப் படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையிலேயே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்தோடு, குறித்த தீவிரவாதிகளிடமிருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆனால், இந்தத் தாக்குதல் குறித்து தலிபான்கள் தரப்பில் ஏதும் இதுவரை கருத்துத் தெரிவிக்கப்படவில்லை.

தலிபான்கள் மற்றும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக கடந்த சில வாரங்களாகவே நன்கர்ஹர், கந்தஹர், வார்டார்க் ஆகிய மூன்று மாகாணங்களில் ஆப்கான் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்தத் தேடுதல் வேட்டையில் தலிபான்கள் பலர் கொல்லப்பட்டனர். மேலும், தலிபான்களிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதற்கிடையே குண்டூஸ் மாகாணத்தில் ஜாய் பேகம் மற்றும் கிர்ஜிஸ் கிராமங்களில் பொலிஸ் சோதனைசாவடிகள் மீது தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு பொலிஸாரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினர் இடையே பலத்த துப்பாக்கிச்சண்டை நடந்தது.

இந்த மோதலில் 10 பொலிஸ் கொல்லப்பட்டதோடு, 3 தலீபான் தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.

பகிரவும்...