Main Menu

19ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிக்க வேண்டும் எனக் கூறினால் அதுவும் ஜனநாயக விரோதமே – லால் விஜயநாயக்க

19ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிக்க வேண்டும் என எவராவது கூறினால் அது ஜனநாயக விரோதக் கருத்தாகக் கருத முடியும் என சட்டத்தரணி லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார்.

அன்று காணப்பட்ட ஜனநாயக விரோத வேலைத்திட்டத்திற்கு எதிராக எழுந்த தேவையின் பிரதிபலனாகவே 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி எனவும் அவர் கூறியுள்ளார்.

19வது திருத்தச் சட்டத்தின் கீழ் பொலிஸ், தேர்தல், அரச சேவை, நீதிச் சேவை என சுயாதீன ஆணைக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டதாகவும், அவை சுயாதீனமாக இயங்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, 19வது திருத்தச் சட்டத்தினை ஒழிக்க வேண்டும் அல்லது அதில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என பலரும் தொடர்ச்சியாக கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

குறிப்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரச தரப்பினர் இதுகுறித்து பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வைத்து கருத்து வெளியிட்டிருந்தார்.

19வது திருத்தச் சட்டத்தில் அதிகாரம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகரிடம் பகிரப்பட்டுள்ளமைக காரணமாக பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...