Main Menu

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தற்கொலை குண்டுத் தாக்குதல் – 12 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானின் கஸ்னி நகரில் நடைபெற்ற தற்கொலை படையின் கார் குண்டுத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 80 பேர் காயமடைந்துள்ள நிலையில் உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இராணுவ தளம் ஒன்றைக் இலக்குவைத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு ஆப்கானைச் சேர்ந்த தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

இதுகுறித்து கஸ்னி மாகாண ஆளநரின் செய்தித் தொடர்பாளர் ஆரிஃப் நூரி தெரிவிக்கையில், “கஸ்னி நகரில் உள்ள தேசிய பாதுகாப்புத் தலைமையகத்தின் உள்ளூர் தளத்திற்கு அருகில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 8 பாதுகாப்பு வீரர்கள், பொதுமக்களில் 4 பேர் உள்ளிட்ட 12 பேர் கொல்லப்பட்டனர். மேலும் காயடைந்துள்ள 80 பேரில் பெரும்பாலானோர் பள்ளி மாணவர்கள். அவர்களில் பெரும்பாலோனோர் மாகாண மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பலத்த காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் கவலைக்கிடமான நிலையில் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்” எனத் தெரிவித்தார்.

இந்த குண்டுத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் ஜாபிஹுல்லா முஜாஹித் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில்,

“வாகனத்தால் பரவும் மேம்பட்ட வெடிக்கும் சாதனத்தைப் பயன்படுத்தி உயிர்த் தியாகம் செய்து தாக்குதல் நிகழ்த்த தயாராக இருந்த ஒருவரின் மூலம், கஸ்னி நகரில் உள்ள தேசிய பாதுகாப்பு தலைமையகத்தின் முக்கிய தளம் குறிவைக்கப்பட்டது.

எங்கள் ஆரம்ப தகவல்களின்படி, இந்த தளம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது மற்றும் இருபது அல்லது முப்பது என்.டி.எஸ் படைகள் மற்றும் ஊழியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர” என குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிரவும்...