Main Menu

ஆப்கானில் சட்டமன்ற உறுப்பினரை இலக்கு வைத்தே குண்டுத் தாக்குல்!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், சட்டமன்ற உறுப்பினர் கான் மொஹம்மட் வர்டாக்-ஐ (Khan Mohammad Wardak) குறிவைத்து நடத்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், கான் மொஹம்மட் உட்பட 20 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றதுடன் பலர் படுகாயமடைந்துள்ளதால் இறப்பு எண்ணிக்கை உயரலாம் என உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காபூலின் கோஷல் கான் சுற்றுப்புறத்தில் உள்ள சந்தி வழியாக சட்டமன்ற உறுப்பினர் கான் முகமது மற்றும் பொலிஸார் சென்றுகொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

இந்தக் குண்டுவெடிப்பினால் பொதுமக்களின் வாகனங்கள் தீப்பிடித்ததுடன் அருகிலிருந்த கட்டடங்களும் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆப்கானிஸ்தான் உட்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தலிபான்கள் கடந்த மூன்று மாதங்களில் நாடு முழுவதும் 35 தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் 507 குண்டுவெடிப்புகளை நடத்தியுள்ளதாகவும் அதில் 487 பொதுமக்கள் கொல்லப்பட்டும் ஆயிரத்து 49 பேர் காயமடைந்தும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Update 01: ஆப்கானிஸ்தான் கார் குண்டு வெடிப்பு – 8 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் காபூலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த சம்பவத்தில் 15 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காபூல் நகரில் பயங்கரவாதிகள் பயங்கரவாத தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் துரதிர்ஷ்டவசமாக, மக்கள் 8 பேர் கொல்லப்பட்டனர், 15 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என உள்துறை அமைச்சின் பேச்சாளர் தாரிக் அரியன் கூறினார்.

தலைநகரின் மேற்கில் கார் குண்டு வெடித்ததாக பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் அதிகாரியும் குண்டுவெடிப்பை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, ஆப்கானிஸ்தான் உட்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தலிபான்கள் கடந்த மூன்று மாதங்களில் நாடு முழுவதும் 35 தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் 507 குண்டுவெடிப்புகளை நடத்தியுள்ளதாகவும் அதில் 487 பொதுமக்கள் கொல்லப்பட்டும் ஆயிரத்து 49 பேர் காயமடைந்தும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...