Main Menu

அமைதிக்கான நோபல் பரிசை வென்ற தென்னாபிரிக்க பேராயர் டெஸ்மண்ட் டுட்டு காலமானார்

தென்னாபிரிக்க பேராயர் எமரிட்டஸ் டெஸ்மண்ட் டுட்டு தனது 90வது வயதில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார்.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பேராயர், கேப்டவுனில் காலமானார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் பேராயர் எமரிடஸ் டெஸ்மண்ட் டுட்டுவின் மறைவு, நமது தேசத்தின் துக்கத்தின் மற்றொரு அத்தியாயமாகும் என ஜனாதிபதி சிரில் ரமபோசா தெரிவித்தார்.

1931 ஆம் ஆண்டு கிளர்க்ஸ்டோர்ப்பில் பிறந்த அவர், 1984 இல் தென்னாபிரிக்காவில் நிறவெறிக்கு எதிரான அவரது பங்கிற்காக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

1975 ஆம் ஆண்டில் ஜொகன்னஸ்பர்க்கில் உள்ள செயின்ட் மேரிஸ் கதீட்ரலின் டீனாக நியமிக்கப்பட்ட முதல் கறுப்பின தென்னாப்பிரிக்கர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...