Main Menu

அமேசன் தீ: அவசரக் கூட்டத்திற்கு ஐ.நா அழைப்பு

அமேசன் காட்டுத் தீ குறித்து விவாதிப்பதற்காக சர்வதேச நாடுகளின் அவசரக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குடெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஜப்பானின் யோகோஹாமா நகரில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஆப்பிரிக்க அபிவிருத்தி தொடர்பான ஏழாவது டோக்கியோ சர்வதேச மாநாட்டில் (TICAD) கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாநாட்டில் அன்டோனியோ குடெரெஸ் மேலும் தெரிவிக்கையில், ”அமேசன் தீயை அணைப்பது குறித்து விவாதிக்க சர்வதேச நாடுகளின் அவசரக் கூட்டத்தை விரைவில் நடத்த வேண்டும். அதற்காக பல்வேறு நாடுகளும் ஆதாரங்களை காட்டுத் தீ சம்பவப் பகுதிகளுக்கு விரைந்து அனுப்ப வேண்டும். இதற்கான பிரத்யேகக் கூட்டம் நடத்துவது குறித்து சம்பந்தப்பட்ட நாடுகளுடன் ஆலோசித்து வருகின்றோம்” எனக்  கூறியுள்ளார்.

உலகத்தின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசன் காடுகள்  தீப் பற்றி எரிந்துவருகின்றன. இந்த விவகாரம் உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமேசன் காட்டுப் பகுதியில் இதுவரை 83 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இது கடந்த 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ சம்பவங்களில் இது அதிகப்பட்ச எண்ணிக்கையாகும். எனினும் உலக அளவில் இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளகுறிப்பிடத்தக்து.

பகிரவும்...