Main Menu

அமெரிக்கா, ஜேர்மனி இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து 90 சதவிகிதம் பலனளிப்பு

அமெரிக்காவின் பைஸர் மற்றும் ஜேர்மனியின் பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி 90 சதவீதம் பலனளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான பைஸர் மற்றும் ஜேர்மனியின் பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி 90 சதவீதம் பலனளிப்பதாக பைஸர் நிறுவன தலைவர் அல்பர்ட் போர்லா தெரிவித்துள்ளார்.

முதல் முறை தடுப்பூசி செலுத்தப்பட்டு 28 நாட்களுக்கு பிறகும், இரண்டாவது முறை இரண்டு டோஸ்கள் செலுத்தப்பட்ட 7 நாட்களுக்குப் பிறகும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் மூன்றாம் கட்ட சோதனையில் பங்கேற்றவர்களின் முதல் தொகுப்பு முடிவுகளில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்த தடுப்பூசி கொரோனாவை தடுக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய சுகாதார நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் முயற்சியில் தாங்கள் குறிப்பிடத்தக்க கட்டத்தை எட்டியிருப்பதாகவும், உலகமே இதனை எதிர்நோக்கி இருக்கும்போது, தடுப்பூசி மேம்பாட்டு திட்டத்தில் தாங்கள் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பகிரவும்...