Main Menu

அமெரிக்காவுடன் 3வது உச்சிமாநாட்டை நடத்த வேண்டும்

அமெரிக்காவுடன் 3வது உச்சிமாநாட்டை நடத்த வேண்டும் என வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் தெரிவித்துள்ளார்.
எனினும் அமெரிக்கா அது குறித்து சரியான ஒழுங்கு முறையை கையாளும் பட்சத்திலேயே, அது இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாட்டுத் தலைவர்களும் இதுவரையில் இரு முறை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
முதலாவது கலந்துரையாடல், கடந்த வருடம் சிங்கபூரில் இடம்பெற்றது. இதன்போது, அவர்களுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் வடகொரியா தமது அணு ஆயுத தளத்தையும் அழித்ததாக தெரிவித்தது.
இதனை தொடர்ந்து, கடந்த பெப்ரவரிமாதம், இரு நாட்டுத் தலைவர்களும் வியட்நாம் தலைநகர் ஹனோயில் சந்திப்பை நடத்தினர்.
எனினும் அந்த சந்திப்பு வெற்றியளிக்கவில்லை என வடகொரிய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பகிரவும்...