Main Menu

அப்பாவி மக்களுக்கு பதிலாக ஊழல்வாதிகளை கொன்று விடுங்கள் – கவர்னர்

காஷ்மீரில், அப்பாவி மக்களுக்கு பதிலாக ஊழல்வாதிகளை கொல்லுமாறு பயங்கரவாதிகளுக்கு கவர்னர் அழைப்பு விடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது,

காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் நேற்று முன்தினம் கார்கில் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘துப்பாக்கி ஏந்திய இந்த பையன்கள் (பயங்கரவாதிகள்) தங்கள் சொந்த மக்களைத்தான் கொலை செய்கிறார்கள். பாதுகாப்பு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளை கொன்று விடுகிறார்கள். ஏன் அவர்களை கொலை செய்கிறீர்கள்? காஷ்மீரின் சொத்துக்களை கொள்ளையடிப்போரை கொன்று விடுங்கள். அப்படி யாரையாவது கொன்றிருக்கிறீர்களா?’ என்று கேள்வி எழுப்பினார்.

கவர்னரின் இந்த பேச்சு மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளன. குறிப்பாக முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா, தனது டுவிட்டர் தளத்தில் கவர்னர் சத்யபால் மாலிக்கிற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இவ்வாறு எதிர்ப்புகள் கிளம்பியதால் கவர்னர் சத்யபால் மாலிக் நேற்று வருத்தம் தெரிவித்தார். இது தொடர்பாக தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘இங்கு (காஷ்மீர்) பரவலாக நடைபெறும் ஊழல் மீதான கோபம் மற்றும் விரக்தியால்தான் அப்படி பேசினேன். எங்கு தோண்டினாலும் ஊழல்தான் தெரிகிறது. அரசியல் சாசன தலைவர் என்ற முறையில் அப்படி நான் பேசியிருக்கக்கூடாது. ஆனால் நான் கவர்னராக இல்லையென்றால் கண்டிப்பாக அப்படிதான் கூறுவேன். அதனால் ஏற்படும் விளைவுகளை சந்திக்கவும் தயார்’ என்று தெரிவித்தார்.

பகிரவும்...