Main Menu

அதிவேக நெடுஞ் சாலைகளின் நாளாந்த வருமானம் 70 வீதத்தால் வீழ்ச்சி!

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளின் நாளாந்த வருமானம் 70 வீதத்தால்  வீழ்ச்சியடைந்துள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரச்சபையின் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் நாளாந்தம் 30 மில்லியன் ரூபாய் வரை வருமானம் கிடைக்கப்பெற்று வந்த நிலையில், தற்போது அது 8 மில்லியன் ரூபாவரை குறைவடைந்துள்ளது.

இலங்கையில் இரு மாதங்களுக்கு மேலாக எரிபொருள் தட்டுப்பாடு நீடிக்கின்றது.

எரிபொருளை பெறுவதற்கு பல நாட்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக அதிகளவான பயணிகள் தூர இடங்களுக்கு சொந்த வாகனங்களில் பயணிப்பதை கைவிட்டுள்ளனர். பொது போக்குவரத்தையே அவர்கள் தெரிவுசெய்கின்றனர்.

மறுபுறத்தில் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்ப நிலையால் சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது.

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான ஏற்பாடும் அமுலில் இருந்தது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அதிவேக நெடுஞ்சாலைகளின் வருமானம் சடுதியாக குறைவடைந்துள்ளது.

பகிரவும்...