Main Menu

அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படங்களின் பட்டியல் வெளியீடு: முதலிடம் பிடித்த விஜய்யின் ‘மாஸ்டர்’

2021ஆம் ஆண்டில் இந்திய அளவில் அதிகப்படியான ரசிகர்களால் பார்க்கப்பட்டு பிரபலமான திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

விஜய்பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி, 2021ஆம் ஆண்டில் இந்திய அளவில் அதிகப்படியான ரசிகர்களால் பார்க்கப்பட்டு பிரபலமான திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஜனவரி மாதம் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘மாஸ்டர்’ படம் முதலிடத்தை பிடித்துள்ளது.
ஆஸ்பிரன்ட்ஸ் என்கிற வெப் தொடர் இரண்டாம் இடத்தையும், பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான தி வைட் டைகர் திரைப்படம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம்-2 திரைப்படம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

அடுத்ததாக தமன்னா நடிப்பில் அண்மையில் வெளியான நவம்பர் ஸ்டோரிஸ் எனும் வெப் தொடர் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. அதையடுத்து மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படம் 6வது இடத்தை பிடித்துள்ளது. பவன் கல்யாணின் வக்கீல் சாப் திரைப்படம் 7-வது இடத்தையும், மகாராணி வெப் தொடர் 8-வது இடத்தையும், ரவி தேஜா நடித்த கிராக் திரைப்படம் 9-வது இடத்தையும், தி கிரேட் இந்தியன் கிச்சன் எனும் மலையாள படம் 10-வது இடத்தையும் பிடித்துள்ளது.

பகிரவும்...