Main Menu

அடையாளம் தெரியாத இரு ஏவுகணைகளை சோதித்த வடகொரியா!

வட கொரியா அடையாளம் தெரியாத வகையிலான இரு ஏவுகணைகளை கடலில் ஏவி பரிசோதித்ததாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) வட கொரியாவின் கிழக்கு கடலோரப் பகுதியில் உள்ள வோன்சான் பகுதியிலிருந்து கடல் பரப்பில் கிழக்கு நோக்கி இந்த இரு ஏவுகணைகளை ஏவி வட கொரியா சோதனை செய்துள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

சுமார் 240 கி.மீ. தூரம் பயணித்த அந்த ஏவுகணைகள், கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய குறைந்த தொலைவு ஏவுகணைகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இதுபோன்ற ஏவுகணைகள் மேலும் ஏவப்படலாம் எனவும் இதனை தொடர்ச்சியாக கண்காணித்து வருவதுடன், எதற்கும் தயார் நிலையில் இருந்து வருவதாகவும் தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் வட கொரியா ஏவுகணைச் சோதனை நடத்தியது இதுவே முதல் முறையாகும்.

நீண்ட தூரம் சென்று தாக்கக் கூடிய வகையிலான ஏவுகணைகளின் பரிசோதனைக்கான தடை உத்தரவை விலக்கிக் கொள்வதாக வட கொரியா அறிவித்து சில வாரங்கள் ஆகியுள்ள நிலையில், அந்நாடு ஏவுகணைச் சோதனை நடத்தியதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

பகிரவும்...