வ/ செக்கடிப்பிலவு அ.த.க.பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக்கொப்பிகள்
வ/ செக்கடிப்பிலவு அ.த.க.பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக்கொப்பிகள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனால் 02.03.2016 அன்று வழங்கி வைக்கப்பட்டன.
பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலியின் சமுகப்பணி பிரிவுக்கு பொறுப்பான திரு.திரவியநாதன் ஐயாவின் வழிகாட்டலுக்கு அமைவாக புலம்பெயர் உறவுகள் இதற்கான நிதியுதவியை வழங்கியிருந்தனர். நிதியுதவி புரிந்த புலம்பெயர் உறவுகளுக்கும், ரி.ஆர்.ரி வானொலிக்கும் பாடசாலை சமுகத்தினர் தமது நன்றியை தெரிவித்தனர்.