வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும் – விவசாய சங்கம்
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும் என விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின் நூறாவது நாள் நிறைவையொட்டி உரயாற்றிய அவர், மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும் எனத் தெரிவித்தார்.
தங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றும்வரை போராட்டம் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வேளாண் சட்டங்களில் விவசாயிகள் கூறும் திருத்தங்களைச் செய்ய அரசு தயாராக இருப்பதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.