விற்பனைக்கு வந்துள்ள 1 TB மெமரி கார்டு..!
உலகின் முதன்முறையாக 1 TB மைக்ரோ எஸ்.டி கார்டை அறிமுகம் செய்துள்ளது.
இன்றைய டெக் உலகில் ஒரு நாளின் அன்றாட வேலைகள் பெரும்பாலவற்றை செல்போன் செயலிகள் மூலமே முடித்து விடமுடியும்.செயலிகளால் வேலைகள் எளிதாக முடிந்தாலும், ஸ்மார்ட்போன்களின் வேகத்தைக் குறைப்பதில் அவை முக்கியமான பங்காற்றுகின்றன. ரேம் மெமரி மட்டுமல்லாது, இன்பில்ட் மெமரியிலும் கணிசமான இடைத்தை செயலிகள் ஆக்கிரமித்துக் கொள்வதுண்டு. அதனலே பலர் ஸ்மார்ட் போனின் மெமரி அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
இதற்கு தீர்வு கானும் வகையில் சாண்டிஸ்க் நிறுவனம் 1TB (1 Terabyte=1000 Gigabytes) செயல் திறன் கொண்ட மைக்ரோ எஸ்.டி கார்டை அறிமுகம் செய்துள்ளது. உலகின் முதன்முறையாக சாண்டிஸ்க் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட 1 TB எக்ஸ்ட்ரீம் மைக்ரோ எஸ்.டி கார்டு மூலம் அதிக தரவுகளை சேமிக்க முடியும். தற்போது சாண்டிஸ்க் 1 TB எக்ஸ்ட்ரீம் மைக்ரோ எஸ்.டி கார்டு 449,99 dollars விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த மெமரி கார்டு ஸ்பெயின், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.