Main Menu

ரணில், மைத்­தி­ரியை அதி­கா­ரத்­துக்கு கொண்­டு­வந்த சாபம் எம்­ மீது விழட்டும் -பேரா­சி­ரியர் சரத் விஜே­சூ­ரிய

ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சே­னவை ஜனா­தி­ப­தி­யாக்க பங்களிப்பை வழங்­கிய தவ­றுக்­கா­கவும் ,நல்­லாட்­சியை எதிர்பார்த்த மக்­களின் எதிர்­பார்ப்பை பிர­தமர் ரணில் சிதைத்த தவறுக்­கா­கவும் எங்கள் மீது சாபம் விழட்டும் என்று நீதி­யான சமூகத்­திற்­கான தேசிய இயக்­கத்தின் இணைத்­த­லைவர் பேரா­சி­ரியர் சரத் விஜே­சூ­ரிய தெரி­வித்தார்.

ரணில் எந்த விதத்­திலும் அரச நிர்­வா­கத்­திற்கு பொருத்­த­மற்­றவர். அது பொன் எழுத்­துக்­களால் எழுத்­தப்­பட்­டுள்­ளது. அவர் கட்­சி­யி­லி­ருந்து நீங்க வேண்டும். இல்­லை­யென்றால் நாட்டை நேசிப்­ப­வர்கள் அவரை நீக்க வேண்டும்  என்றும் அவர் குறிப்­பிட்டார். 

கோட்டை ஸ்ரீ நாக விகா­ரையின் விகா­ரா­தி­பதி மாது­லு­வாபே சோபித தேரரின் 77 ஆவது ஜனன தினம் நேற்றய முன்தினம் பண்டாரநாயக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச  மாநாட்டு மண்­ட­பத்தில் நினைவு கூரப்­பட்­டது. இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். 

அங்கு அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், 

ஜன­வரி 8 ஆம் திகதி பிரார்த்­தனை நிறை­வே­றாமல் அரச நிர்­வாகம் சிதை­வ­டை­வ­தற்கு இரண்டு கார­ணங்கள் உள்­ளன. புத்தி சாதூர்­ய­மற்ற தற்­பெ­ரு­மையால் தலைக்­கணம் கொண்ட அதே­வேளை, மக்கள் மீது சிறி­த­ளவும் அக்­க­றை­யற்ற , மக்­க­ளுக்கு பொறுப்பு கூறாத பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவின் பிற்­போக்கு அர­சி­யலே முத­லா­வது கார­ண­மாகும். இரண்­டா­வ­தாக அடி­வ­ருடி ஒரு­வ­ரிடம் நெல்சன் மண்­டே­லாவைப் போன்ற தலை­மைத்­து­வத்தை எதிர்­பார்க்கும் முட்டாள் தன­மாகும். 

ஜன­நா­ய­கத்தை மதிப்­ப­வ­ராக தன்னை வெளிப்­ப­டுத்திக் கொண்டு , அதற்கு எதி­ராக செயற்­படும் ஒரு­வ­ரி­டத்தில் ஜன­நா­யக ரீதி­யி­லான நிர்­வா­கத்தை எதிர்­பார்த்­த­மையே இன்று ஐக்­கிய தேசிய கட்சி தவ­றான வழியில் செல்­வ­தற்­கான கார­ண­மாகும். தற்­போ­தைய பிர­த­மரே இதன் பின்­பு­லத்தில் உள்ளார். 

பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ஜன­நா­ய­கத்­திற்கு விரோ­த­மான முறையில் தொடர்ச்­சி­யாக ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மைத்­து­வத்­துக்கு உரிமை கோரி வரு­கின்றார். ஏகா­பத்­தி­ய­வா­தி­யா­கவே அவர் கட்சி தலை­மைத்­து­வத்தை வகிக்­கின்றார். ஐக்­கிய தேசிய கட்­சியை தனக்கு தேவை­யா­ன­வர்­க­ளுக்கு மாத்­திரம் உகந்த வகையில் வைத்­தி­ருப்­ப­துடன்  வேறு எவ­ருக்கும் வாய்ப்­புக்­களை வழங்­காது இருப்­பதே அவ­ரது அர­சியல் நோக்­க­மாகும். 

தொடர்ச்­சி­யாக பாரிய தோல்­வி­க­ளுக்கு முகங்­கொ­டுத்து எதிர்க்­கட்சி தலைவர் பதவி மீது மோகம் கொண்ட ஒரு­வரை கட்சி தலை­வ­ராக ஏற்றுக் கொண்ட ஐக்­கிய தேசிய கட்சி உறுப்­பி­னர்கள் ஏகா­தி­பத்­தி­யத்தின் கை பொம்­மை­க­ளாவர். இவர்­களே இதற்கு பொறுப்பு கூற வேண்டும். 

நாட்டில் பிர­தான கட்­சி­யொன்றின் தலை­வ­ராக இருந்து கொண்டு, இரு தட­வை­களில் ஜனா­தி­பதி தேர்­த­லிலும் போட்­டி­யிட்டு, கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்­தலில் ஜனா­தி­பதி வேட்­பா­ளரை கடன் வாங்­கிய இவர் தலை­மைத்­துவம் வகிக்க தகு­தி­யற்­றவர் என்­பதை வெளிப்­ப­டுத்­து­கின்­றது. 

அவரை பல தட­வைகள் அர­சியல் அநா­தை­யாக்கி அர­சி­ய­லி­லி­ருந்து ஓரங்­கட்­டு­வ­தற்கு முயற்­சித்த தற்­போ­தைய எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜ­ப­க்ஷ­விடம்  தஞ்­ச­ம­டைய தற்­போது  ரணில் முயற்­சிக்­கின்றார். அவ­ரது பாதங்­களை பற்றி அர­சியல் அதி­கா­ரங்­களைப் பெற்றுக் கொள்­வ­தற்கும் முயற்­சிக்­கின்றார்.

மெத­மு­ல­ன­விற்கு செல்­வ­தற்கு மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு இரண்டு ஹெலி­கப்­டர்­களை வழங்­கி­ய­தோடு, 2015 ஆம் ஆண்டு ஜன­வரி 9 ஆம் திகதி காலை மஹிந்­த­வையும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ரையும் பாது­காப்­ப­தாக வழங்­கிய வாக்­கு­று­தி­களை இன்றும் நிறை­வேற்றி வரு­கின்றார். 

பிர­த­ம­ராக பத­வி­யேற்­றதன் பின்னர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஓரங்­கட்­டி­யது மாத்­தி­ர­மின்றி தனது தேவைக்­கேற்ப நாட்டை நிர்­வ­கிப்­பதே அவ­ரது தேவை­யாகும். இவ்­வாறு சிந்­திப்­பது துர­திஷ்­ட­மா­னது. இந்த சூழ்­நி­லையை சரி­யாக புரிந்து கொண்ட சோபித தேரர் இரண்டு தட­வைகள் பிர­த­மரை சந்­தித்து ஜனா­தி­ப­தி­யுடன் முரண்­ப­டாமல் இரு­வரும் இணங்கி செயற்­ப­டு­வதே முறை­யா­னது என்­பதை வலி­யு­றுத்தி வந்தார். அதனை கேட்டுக் கொண்ட போதும் அவர் அதனை பின்­பற்­ற­வில்லை. 

ரணில் விக்­ர­ம­சிங்க அனு­பவம் மிக்க அர­சி­யல்­வா­தி­யாக இருந்த போதும் கண்­ணாடிக் கூண்­டுக்குள் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்றார். எமது நாட்டின் அர­சியல் அவ­ருக்கு பொருந்­தாது. அர­சியல் அரங்கில் திற­மை­களை வெளிப்­ப­டுத்­து­கின்ற போதிலும், அதில் வெற்றி பெற முடி­யா­தவர். 

ரணி­லுடன் ஒப்­பி­டு­கையில் மஹிந்த ராஜ­பக்ஷ கற்­த­ரை­யிலும், கரடு முர­டான தரை­யிலும் நீந்தக் கூடி­யவர். ரணில் எந்த விதத்­திலும் அரச நிர்­வா­கத்­திற்கு பொருத்­த­மற்­றவர். அது பொன் எழுத்­துக்­களால் எழுத்­தப்­பட்­டுள்­ளது. அவர் கட்­சி­யி­லி­ருந்து நீங்க வேண்டும். இல்­லை­யென்றால் நாட்டை நேசிப்­ப­வர்கள் அவரை நீக்க வேண்டும். 

அவ­ரிடம் குழு­வொன்றும், கூட்­ட­மொன்றும், கட்­சி­யொன்றும் உள்­ளன. இந்­நி­லையில் தான் தனித்து விடப்­பட்­டுள்­ள­மையை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அறிந்­துள்ளார். எனினும் அதன் அபாய நிலையை ரணில் விக்­ர­ம­சிங்க புரிந்­து­கொள்­ளாமல் அதே மம­தை­யு­ட­னேயே உள்ளார். இந்த நிலை­மையைப் பயன்­ப­டுத்தி மஹிந்த அம­ர­வீர ஜனா­தி­ப­தியை தன்­பக்கம் இழுக்க முயற்­சிக்­கின்றார். 

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் பிர­பல உறுப்­பி­னர்கள் பலரும் நீதியின் பிடியில் சிக்­க­வி­ருந்­தனர். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­ட­னான தொடர்­பு­களை அவர்கள் வலுப்­ப­டுத்திக் கொள்­கின்­றனர். உள்­ளு­ராட்சி தேர்தல் பிர­சா­ரங்­களின் போது மத்­திய வங்கி ஊழல் தொடர்­பிலும், அர்­ஜூன மகேந்­தி­ரனின் செயற்­பாடு தொடர்­பிலும் கடும் ஊழல்­வா­தி­க­ளான எதி­ரி­ண­யினர் விமர்­சிக்க தொடங்­கினர். இதனால் ஐ.தே.க மற்றும் சு.க என்­பன சீர­ழி­கின்­றன. பிணை­முறி தொடர்­பாக விசா­ரிக்க ஜனா­தி­பதி ஆணைக்­குழு நிய­மித்தார். இதன் போது கூட மஹிந்த காலத்தில் இடம்­பெற்ற ஊழல்­களை விசா­ரிக்­கு­மாறு ரணில் கோர­வில்லை. 

இதனால் தான்  மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு ஜனா­தி­பதி அதி­கா­ரங்­களை வழங்­கினார். அதி­லி­ருந்தும் பிர­தமர் பாடம் கற்றுக் கொள்­ள­வில்லை. அவர் ஒரு புது­மை­யான மனிதர். விமல் வீர­வன்ச, தினேஷ் குண­வர்­தன உள்­ளிட்­டோரைப் பாது­காத்து எதிர்க்­கட்சி தலைவர் பத­வியைத் தக்­க­வைத்துக் கொள்ள அவர் முயற்­சிக்­கின்றார். 

எவ்­வா­றி­ருப்­பினும் எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் பொது வேட்­பாளர் ஒரு­வரைக் கள­மி­றக்கி வெற்­றி­பெறச் செய்து தற்­போ­தைய நிலை­யி­லி­ருந்த விடு­பட வேண்டும். எனவே நிய­மிக்­கப்­படும் பொது வேட்­பாளர் வேட்­பு­மனு தாக்கல் செய்­வ­தற்கு முன்­னரே தனது கட்சி உறுப்­பு­ரி­மையை இரத்து செய்ய வேண்டும். 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை பொது வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கிய போது அதற்கு ஒத்­து­ழைப்பு நல்­கி­யமை நாம் செய்த தவ­றாகும். அந்த சாபத்தை நாங்கள் ஏற்­கின்றோம்.  எனவே மக்­க­ளுக்கு சேவை­யாற்றக் கூடிய ஒரு தலை­வரை தெரிவு செய்­வ­தற்கு நாம் அனை­வரும் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட வேண்டும் 

மைத்­ரி­பால சிறி­சேன ஊழல் மோச­டி­யற்­றவர் , அனு­ப­வ­முள்­ளவர் , இன­வாதம் இல்­லா­தவர் என்று சந்­தி­ரிகா சொன்­னதால் நாங்கள் அவரை பொது வேட்­பா­ள­ராக்­கினோம். இன்று அவை அனைத்தும் பொய்­யா­னவை என முழு நாட்­டிற்கும் தெரியும்.

விமா­னங்­களை நிரப்பி பரி­வா­ரங்­க­ளுடன் வெளி­நாட்டு சுற்­றுலா சென்­றா­ரென நாம் மஹிந்­தவை கேலி செய்தோம். இன்று அதில் மைத்ரி மஹிந்­தவை தோற்­க­டித்­து­விட்டார்.

மஹிந்த நீதி­மன்­றத்தை அதன் சுதந்­தி­ரத்­தன்­மையை கேள்­விக்­குறி ஆக்கியதால் அரசியலமைப்பு சபையின் தேவை ஏற்பட்டது .ஆனால் தனக்கு தேவையான நீதிபதிகளை நியமிக்க முடியாமற் போனதால் சிறிசேன  அதனை அநாதரவான பிள்ளையாக்கிவிட்டார் .

நிறைவேற்று அதிகாரத்தால் தனி மனிதனுக்கு வரும் திமிர் தானே இது?ஒருவரை நம்பி பதவியை கொடுத்தால் அவர் பரம்பரைக்கு உழைப்பது, பிள்ளைகளுக்கு முக்கிய  பாதுகாப்பு கொடுப்பது எல்லாம் கேலிக்கூத்தல்லவா? தந்தை ஜனாதிபதியினால் பிள்ளைகள் திடீர் பணக்காரர் ஆகலாமா? இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

சிறிசேன மற்றும் ரணிலுக்காக நாங்கள் எங்கள் மீதே சாபம் இட்டுக் கொள்கிறோம். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்க பங்களிப்பை வழங்கிய தவறுக்காகவும் ,நல்லாட்சியை எதிர்பார்த்த மக்களின் எதிர்பார்ப்பை பிரதமர் ரணில் சிதைத்த தவறுக்காகவும் எங்கள் மீது சாபம் விழட்டும்.