Main Menu

புலனாய்வுத் துறை தலைவரது கடிதம் வெளியானது!

உயிர்த்த ஞாயி­று­தி­னத்­தன்று நாட்டில்  தற்­தொலைத் குண்­டுத்­தாக்­கு­தல்கள் நடத்­தப்­ப­டலாம் என்றும் இதற்­கான வாய்ப்பு இருப்­ப­தா­கவும் தெரி­வித்து  ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி தேசிய புல­னாய்வுத் துறையின் தலைவர் சிசிர மென்டிஸ் , பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜய­சுந்­த­ர­வுக்கு அறி­வித்­தி­ருக்கும் கடிதம் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது நேற்றைய தினம் சில இணையத் தளங்கள் இந்த கடி­தத்­தினை வெளியிட்­டி­ருந்­தன.

பாரா­ளு­மன்ற தெரிவுக் குழு முன்­னி­லையில்  நேற்று முன்­தினம் சாட்­சியம் வழங்­கி­யி­ருந்த சிசிர மென்டிஸ், தாக்­குதல் அச்­சு­றுத்தல் குறித்து முன்­ன­தாக எழுத்­து­மூலம் பொலிஸ் மா அதி­ப­ருக்கு தெரி­யப்­ப­டுத்­தி­யி­ருந்­த­தாக கூறி­யி­ருந்தார்.

அதே சமயம் நேற்று  அறிக்­கை­யொன்றை வெளியிட்ட பாது­காப்பு அமைச்­ச­ரான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தாக்­குதல் குறித்து எந்த முன்­னெச்­ச­ரி­கையும் தனக்கு கிடைக்­க­வில்லை என தெரிவித்திருந்தார்  இந்த நிலையிலேயே இந்த கடிதம்  வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

பகிரவும்...