முல்லைத்தீவில் அனுமதியற்ற தொழில்களில் ஈடுபட்ட 47 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு…

முல்லைத்தீவு மாவட்டத்தில் அனுமதியற்ற தொழில்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு இதுவரை 47 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மேறகொள்ளப்பட்டு வருகின்ற சட்டவிரோதத் தொழில்கள் நிபந்தனை மீறிய கடற்தொழில்கள் என்பவற்றால் இந்தப்பிரதேசத்தில் வாழ்கின்ற சுமார்4500 இற்கும் மேற்பட்ட மீனவர்களின் வா ழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவசங்கங்கள் கடற்தொழில் சமாசம் எனப் பல தரப்பினரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். இதேவேளை முல்லைத்தீவு நாயாறு பகுதியில் 400 இற்கும்மேற்பட்ட படகுகள் நிபந்தனைகளை மீறி தொழில்களில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான தொழில் நடவடிக்கையால் தமது வாழ்வாதாரமான கடற்தொழில் முழுமையாகவே பாதிப்படைவதாக சுட்டிக்காட்டியுள்ள மீனவர்கள் பெரும் முதலீடுகளைச் செய்து நாள் முழுவதும் கடலுக்குச் சென்று வெறும்கையுடன் திரும்புகின்ற ஒரு நிலைமையே அதிகம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, முள்ளிவாய்க்கால் புதுமாத்தளன் நாயாறு கொக்கிளாய் போன்ற பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மேற்படி சட்டவிரோதத்தொழில்கள் மே மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம்வரையான காலப்பகுதிகளில் அதிகளவாக மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தற்போது வெளிமாவட்டங்களைச்சேர்ந்த 206 படகுகளுக்கான தொழில் அனுமதிகள் அமைச்சு மட்டத்தில் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவ்வாறான அனுமதிகளுடன் வருகின்ற படகுகள் தொழிலில் ஈடுபட அனுதிப்பதாகவும் அனுமதியின்றி வருகின்ற படகுகளை வெளியேற்றும் நடவடிக்கைகளை திணைக்களம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.