பொலிஸார் மீது தாக்குதல்: தீவிர வாதிகளைத் தேடி தீவிர தேடுதல் பணியில் இராணுவத்தினர்
ஜம்முவில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளைத் தேடும் பணியில் இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
புல்வாமா- பரிகம் கிராமத்தில் ரோந்து சென்று கொண்டிருந்த பொலிஸார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதில் யாருக்கும் காயமேற்படவில்லை. எனினும் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தப்பியோடி விட்டனர்.
இதனைத் தொடர்ந்து இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் புல்வாமாவைச் சுற்றியுள்ள பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.