Main Menu

பிரிட்டன் ராணியிடம் ’அட்மின்’ பணிக்கு ஆள் தேவை… ரூ.26.5 லட்சம் சம்பளம்!

அட்மின் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஆண்டுக்கு சம்பளத்துடன் 33 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும்.

ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளப் பக்கங்களில் மிகவும் துடிப்பான, தொழில்நுட்பத்தில் தேர்ச்சியான நபர்களுக்கான ‘சோஷியல் மீடியா மேனேஜர்’ பணி இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையில் காலியாக உள்ளது.

மகாராணியின் அட்மின் ஆகவே பணியாற்றக் கூடிய இப்பதவிக்கு இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையில் சம்பளமாக சுமார் 26.5 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்கள் பக்கிங்ஹாம் அரண்மனையின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஊதியத்துடன் தினமும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். ஆண்டுக்கு சம்பளத்துடன் 33 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். பணியிடம் பக்கிங்ஹாம் அரண்மனையேதான். கடந்த மார்ச் மாதம் தான் ராணி முதன்முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய கணக்கு தொடங்கியுள்ளார்.

ராணி எலிசபெத் தற்போதைய சமூக வலைதளப் பயன்பாடு குறித்து அதிகப்படியான பரிச்சியம் இல்லாதவர் என்பதால் அவருக்கு உதவுவதற்காகவே இப்பணியிட வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.