Main Menu

130 கோடி இந்தியர்களின் கனவுகளை நிறைவேற்றுவேன் – பிரதமர் நரேந்திர மோடி

130 கோடி இந்தியர்களின் கனவை நிறைவேற்ற தீர்மானத்துடன் பணியாற்றி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த 17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக தனிபெருபான்மையுடன் அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வரும் 30-ம் தேதி பதவியேற்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் பங்கேற்க பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நரேந்திர மோடி இந்திய மக்களுக்கு  தனது ட்விட்டரில் பக்கத்தில், இந்த பதவிக்காலத்தின் சூரிய உதயம் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நமது பணியின் வேகம், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் இருக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும் நாம் அனைவரும் கனவுகண்ட புதிய இந்தியாவை உருவாக்கவும், 130 கோடி இந்தியர்களின் கனவுகளை நிறைவேற்றவும் அதிக தீர்மானத்துடன் உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Narendra Modi@narendramodi

The sun sets on this term but the brightness our work has brought will continue to illuminate the lives of millions.

A new dawn awaits, a new term beckons.

We are even more determined to fulfil the dreams of 130 crore Indians and create the New India all of us dreamt of.President of India@rashtrapatibhvnPrime Minister @narendramodi called on President Kovind at Rashtrapati Bhavan. The Prime Minister tendered his resignation along with the Union Council of Ministers52.8K4:41 PM – May 24, 2019Twitter Ads info and privacy10K people are talking about this

பிரதமராக பதவியேற்பதற்கு முன்னதாக, தனது வாரணாசி தொகுதிக்கு 28-ம் தேதி சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...