Main Menu

பிரான்ஸ் ரி.ஆர் ரி வானொலியின் சமூக நலப்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆறு இலட்சத்து 25 ஆயிரம் ருபா பணம் கையளிப்பு நிகழ்வு வவுனியா வடக்கு சின்னடம்பன் பாடசாலையில்; 10.11.2013 நடைபெற்றுள்ளது.

போரினால் படுகாயமடைந்தவர்களையும் மாற்று திறனாளிகளையும் அரசு கைவிட்டுள்ளது போர் நடைபெற்று முடிந்து 4 வருடங்களாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு எந்தவித உதவியும் செய்யவில்லை. பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் போராளிகள் மாணவர்கள் குண்டுகளால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 200 இற்கு மேற்பட்டவர்கள் கழுத்திற்கு கீழ் இயங்கமுடியாது வாழ்நாள் முழுவதும் இன்னொருவரின் உதவியுடன் தங்கி வாழவேண்டியுள்ளது. அதேபோன்று 800இற்கு மேற்பட்ட மாணவர்களின் உடலில் உள்ளல் துண்டுகள் அகற்றப்படாது உள்ளது. இது தவிர ஆயிரக் கணக்கான பொது மக்களின் உடல்களில் செல்துண்டு குண்டுகள் அகற்ற முடியாது உள்ளது இவ்வருடம் உட்பட்ட . யுத்த ஓய்வுக்குப் பின்னரான எந்வொரு வரவு செலவுத் திட்டத்திலும் ஒரு ரூபா பணம்கூட இவர்களின் வைத்தியத் தேவைகளுக்காவோ வாழ்வாதாரத்திற்காகவோ ஒதுக்கப்படவில்லை.

இத்தேவையை உணர்ந்து. வவுனியா வடக்குப் பிரதேசத்தில் போரால் பாதிக்கப்பட்ட செல் வீச்சு மற்றும் குண்டு வீச்சினாலும் துப்பாக்கிச் சன்னங்களினாலும் காயமடைந்தவர்களில் மிக மோசமாகக் காயமடைந்து உடல் உறுப்புக்களை இழந்த 520 பேர் வாழ்ந்து வருகின்ற நிலையில் அவர்களுள் மாற்றுத்திறனாளிகளக்கும் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மொத்தம் 25 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபா பணம் கையளிக்கப்பட்ட அதேவேளை போரில் தாய் தந்தையரை இழந்த 34 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா மூவாயிரம் ரூபா பணமும் வங்கியில் வைப்பிட்ட வங்கிப் புத்தகங்களும் கையளிக்கப்பட்டன.

பிரான்ஸ் ரி.ஆர் ரி வானொலியின் சமூக நலப்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆறு இலட்சத்து 25 ஆயிரம் ருபா பணம் கையளிப்பு நிகழ்வு வவுனியா வடக்கு சின்னடம்பன் பாடசாலையில்; 10.11.2013 நடைபெற்றுள்ளது.

வவுனியா வடக்கு சினனடம்பன் பாடசாலையில்;;; நடைபெற்ற நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மாகாண சபை உறுப்பினர்கள் இந்திரராஜா தியாகராஜா ஆகியோருடன் நெடுங்கேணி பிரதேச சபை பிரஜைகள் குழுத்தலைவர் தேவராசா கிராம அலுவலர் கணேசராஜா மற்றும் அதிபர் கெங்காதரன் ஆகியோரும் பெற்றோரும் பங்கு கொண்டிருந்தனர்.

இந்நிதி கையளிப்பானது பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் அவர்களின் முயற்சியால் ஒழுங்குபடுத்தப்பட்டு பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தமக்கு உதவிகளை வழங்கிய ரி.ஆர்.ரி வானொலியின் நிர்வாகத்தினருக்கும் அதன் நேயர்களுக்கும் உதவிககைப் பெற்றுக் கொண்டவர்கள் மனம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டார்கள்.

5604543_orig 3499147_orig 1198156_orig 4393896_orig 7880069_orig 6739805_orig 9233455_orig 8086973_orig 6566084_orig

பகிரவும்...