பிரான்ஸில் வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!
பிரான்ஸில் வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
Road Safety என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வீதி விபத்துக்களின் போது ஏற்பட்ட உயிரிழப்பு 16.9 வீதத்தால் குறைவடைந்துள்ளது.
2019 ஏப்ரலில் 236 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் கடந்த ஏப்ரல் மாதம் 188 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து வீதி பாதுகாப்பு 7 வீத வளர்ச்சி கண்டுள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.