பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொள்ளவுள்ளார். சிறிலங்கா அதிபர் செயலக பேச்சாளர் ஒருவர் இதனை உறுதி செய்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
இரண்டாவது பதவிக்காலத்துக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, வரும் 30ஆம் நாள் பதவியேற்கவுள்ளார்.
புதுடெல்லியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்கவுள்ளார்.
இந்தியப் பிரதமராக மீண்டும் பதவியேற்கவுள்ள மோடியுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.