நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 9 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரவுள்ளார்.
அவரை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியப் பிரதமர் கடந்த 30 ஆம் திகதி 2 வது பதவிக் காலத்திற்காக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து முதற் தடவையாக மாலைத்தீவு, இலங்கை ஆகிய நாடுகளுக்கு அவர் விஜயம் செய்கிறார்.
அயல் நாடுகளுடனான நட்புறவுக்கு உள்ள முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவது விஜயத்தின் நோக்கம் என இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.