Main Menu

துயர் பகிர்வோம் – திரு.பாஸ்கரன் அபிநயன் (12/05/2025)

ஜேர்மனி – சார்புறுக்கனை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. பாஸ்கரன் அபிநயன் அவர்கள் 02-05-2025 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.

அன்னார், பாஸ்கரன் – சாந்தி தம்பதியினரின் அன்பு புதல்வனும்,

அபிசாந், அருஸ்ணன் ஆகியோரின் பாசமிகு சகோரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்.

செல்வன்.அபிநயன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

இறுதிக்கிரியைகள்

புதன்கிழமை 14 MAY, 2025, காலை 9:00 -12:00

Am Hauptfriedhof 21
(NEUE EINSEGNUNGSHALLE)
66117 SAARBRUCKEN

அழுத விழிகளோடு விடை தருகிறோம்!

இதயம் ஒரு கணம் துடிப்பை மறந்தது
இருவிழி ஆறாய் பெருகி வழிந்தது
கனத்த மனசு, கடவுளே! உன்மனம் கல்லா என்றது
அபிநயன் உதிர்வினால் உள்ளமே உடைந்தது!

கல்வியில் நிறைவு பணியிலே சிறப்பு
உறவுகள் நட்புகள் அன்பிலே உயர்வு
பெற்றவர் செல்லமாய் அண்ணா தம்பிக்கு
அருமை சகோதரனாய் – மற்றோர்க்கும்
உதவிடும் மனித நேயம் மிக்கவனாய்!

மணக்கோலத்தில் மகனைக்காணும் திருநாளுக்காய்
மனக்கோலம் போட்டு மகிழ்ந்த பெற்றவர் கனவினை
கணத்தில் அழித்து கண்ணீரை கொடுத்த
காலனே! இதயம் என்பதே உனக்கு இல்லையா?

இளம் வயதில் உன் அகால மரணம்
இன்னமும் மனசு நம்ப மறுக்குது
இன்முகத்தோடு அனைவரையும்
அன்பினால் அணைத்திடும் அபிநயா!
ஆறாத்துயரோடு அழுத விழிகளோடு
விடை தருகிறோம்!!!

ரீ.ஆர்.ரீ. தமிழ் ஒலி கலைஞர்கள், பிரான்ஸ்
ரீ.ஆர்.ரீ. தமிழ் ஒலி நேயர்கள்

பகிரவும்...
0Shares