திரைப்படமாகிறது மலேசியா வாசுதேவனின் வாழ்க்கை வரலாறு
நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என்று பன்முக திறன் கொண்ட மலேசியா வாசுதேவனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவுள்ளது.
மலேசியா வாசுதேவன் வாழ்க்கை வரலாற்றை அவரது மகனும் நடிகருமான யுகேந்திரன் திரைப்படமாக எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளதுடன், மலேசியா வாசுதேவன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி பொருத்தமாக இருப்பார் என்றும் கூறியுள்ளார்.
மலேசியாவில் நாடகங்களில் நடித்த அனுபவத்துடன் சென்னை வந்த வாசுதேவன் 16 வயதினிலே படத்தில் பாடிய “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிகுஞ்சு வந்ததுன்னு” என்ற பாடல் மூலம் பிரபலமானார். சுமார் 8 ஆயிரம் பாடல்கள் பாடி உள்ள அவர் 85 திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.