Main Menu

திருமண வாழ்த்து – வினோத் & மதுஷ் (03/06/2024)

தாயகத்தில் நயினாதீவை சேர்ந்த பிரான்ஸ் Pont-Sainte-Maxence இல் வசிக்கும் வரதராஜன்-சசிகலா தம்பதிகளின் செல்வப்புதல்வன் வினோத் அவர்களும், தாயகத்தில் கோப்பாயை சேர்ந்த பிரான்ஸ் Val d’Europe இல் வசிக்கும் உமைபாகன்-புஸ்பவதி தம்பதிகளின் செல்வப் புதல்வி மதுஷ் அவர்களும் 02ம் திகதி ஜூன் மாதம் ஞாயிற்றுக்கிழமை திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்கள்.

நேற்றைய தினத்தில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட வினோத் & மதுஷ் தம்பதிகளை அன்பு அப்பா, அன்பு அம்மா, அன்பு அம்மம்மா, அன்பு அப்பம்மா, அன்பு மாமா, அன்பு மாமி, அன்பு அண்ணா அஜிர்த்தன், அபிலாஷன், தம்பி தினேஷ், தங்கை விஜிதா மற்றும் அண்ணாமார், அக்காமார், தம்பிமார், தங்கைமார் பெரியப்பாமார், பெரியம்மாமார், சித்தப்பாமார், சித்திமார் , மாமாமார், மாமிமார், மச்சான்மார், மச்சாள்மார், மருமகள் அத்தை நைஸ் லெயோனா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இன்று போல் என்றும் பதினாறு செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென்று வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.

நேற்றைய தினம்(02/06/2024) திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட வினோத் & மதுஷ் தம்பதிகள் என்றும் சீர்மேவி, புவி தன்னில் சிறப்புற வாழ TRT குடும்பமும் வாழ்த்தி மகிழ்கின்றது.

இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் பெரியப்பா சற்குணம் குடும்பத்தினர் மற்றும் அப்பம்மா செல்லம்மா.

அவர்களுக்கும் எமது நன்றி

இல்லறம் என்னும் நல்லறத்தில்
இணைந்த செல்வங்களே!
கடமையில் கண்ணாயிருந்து
உறவுகளுடன் ஒன்றாக கலந்து
குடும்பம் என்ற இன்பத்தில் சங்கமமாகி
ஆல் போல் தளைத்து அறுகுபோல் வேரூன்றி
வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்!
-பெற்றோர்கள்

பகிரவும்...
0Shares