Main Menu

திருமண வாழ்த்து- ருபேசன் & இபிஷா (23/04/2022)

தாயகத்தில் திருகோணமலை உவர்மலையை சேர்ந்த Australia மெல்போனில் வசிக்கும் ஜீவராசா மதிவதனா தம்பதிகளின் செல்வ புதல்வன் ருபேசன் அவர்களும் தாயகம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இத்தாலியில் வசிக்கும் இருதயராசா மங்கையற்கரசி தம்பதிகளின் செல்வ புதல்வி இபிஷா அவர்களும் 23ம் திகதி ஏப்ரல் மாதம் சனிக்கிழமை அன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள்.

23ம் திகதி ஏப்ரல் மாதம் சனிக்கிழமை அன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட ருபேசன் & இபிஷா தம்பதிகளை அன்பு அப்பா, அன்பு அம்மா, மாமா, மாமி, தாயகத்தில் வசிக்கும் ஜீவிதா டினா அக்கா குடும்பம், மருமக்கள் அக்சயா, ஆதிஸ், அனனியா, ஆரனியா, தம்பி விது, இத்தாலியில் வசிக்கும் அண்ணா இலக்கியன், மற்றும் தாயகத்தில் வசிக்கும் மாமாமார், மாமிமார், மச்சான்மார், மச்சாள்மார், அண்ணாமார், அண்ணிமார், தம்பிமார், தங்கைமார், அக்காமார், அத்தான்மார், மருமக்கள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் தம்பதிகள் பதினாறு செல்வங்களும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

23ம் திகதி திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட ருபேசன் இபிஷா தம்பதிகளை TRT தமிழ் ஒலியின் அன்பு உறவுகள் மற்றும் அன்பு நேயர்கள் எல்லா செல்வங்களும் பெற்று பார் போற்ற வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வந்த அன்புறவுகள் பெல்ஜியத்தில் வசிக்கும் வில்வராசா சிவராணி தம்பதிகள்

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்

திருமண வாழ்த்து
இறைவன் இரு மனதை இணைத்து வைக்கும் நாள் இன்று
இரு மனதும் ஒன்றாகும் திருமண நாள் இன்று
அன்பு கொண்ட பெற்றோரும் மகிழும் நாள் இன்று
அகம் மகிழ்ந்து வாழ்த்துவார் உறவுகளும் வந்து
இன்று முதல் தம்பதிகள் நீங்கள் என்று
மலர் தூவி வாழ்த்திடுவார் நீங்கள் நீடுழி வாழ்க என்று
பற்பல பெறுபேறு காணுங்கள் என்று
பற்பலரும் உங்களை வாழ்த்தும் நாள் இன்று
வாழ்க்கை வசந்தத்தில் இணைந்து கொண்டு
வசந்தம் என்ற அன்பு மழையிலே நனைந்து கொண்டு
வாழ்வாங்கு வாழுங்கள் நீங்கள் என்று
வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் நாங்களும் இன்று.
நன்றி.