Main Menu

பிரான்ஸ் ஜனாதிபதியாக இம்மானுவல் மக்ரோன் இரண்டாவது முறையாக தேர்வு!

பிரான்ஸ் ஜனாதிபதியாக இம்மானுவல் மக்ரோன் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஜனாதிபதியாகியுள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக இருந்து வரும் இவரது பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைகின்ற நிலையில், அவர் இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார்.

இரண்டாவது சுற்று தேர்தலை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) எதிர்கொண்ட இம்மானுவல் மக்ரோங் தனக்கு எதிராக போட்டியிட்ட லீ பென்னை தோற்கடித்து ஜனாதிபதியானார்.

இந்த தேர்தலில் மக்ரோங் 58.55 சதவீத வாக்குகளையும் லீ பென் 41.45 சதவீத வாக்குகளையும் பெற்றனர்.

இது வரை வலதுசாரி தலைவர்கள் பெற்ற வாக்குகளை விட லீ பென் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தபோதிலும், இத்தேர்தலில் அவர் தோற்றுள்ளார்.

தேர்தலில் வெற்றி உறுதியான பின்னர், ஈஃபிள் டவர் அருகே தன் ஆதரவாளர்களிடையே உரையாற்றிய மக்ரோங், தான் ‘அனைவருக்குமான ஜனாதிபதியாக இருப்பேன்’ என தெரிவித்தார்.

தேர்தலில் தோல்வியுற்றாலும், தான் பெற்ற வாக்குகள் வெற்றியை குறிப்பதாக லீ பென் தெரிவித்தார்.

மக்ரோங் வெற்றிக்கு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி, போர்துக்கல் பிரதமர் அண்டோனியோ கோஸ்டா உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவாகின. இது 1969ஆம் ஆண்டுக்குப் பின்னான தேர்தல்களில் பதிவான குறைவான வாக்கு சதவீதம் இது ஆகும்.

பகிரவும்...