Main Menu

திருமண வாழ்த்து – ராஜ்குமார் & அகிலா (22/09/2018)

தாயகத்தில் கொக்குவில்லை சேர்ந்த விஜயகுமார் சுகந்தமாலா தம்பதிகளின் செல்வப்புதல்வன் ராஜ்குமார் அவர்களும் ஜேர்மனியில் வசிக்கும் ஆறுமுகம் குகா தம்பதிகளின் செல்வப்புதல்வி அகிலா அவர்களும் கடந்த 30ம் திகதி ஆகஸ்ட் மாதம் வியாழக்கிழமை அன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்கள்.

கடந்த 30ம் திகதி திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட ராஜ்குமார் அகிலா தம்பதிகளை அன்பு அப்பா அம்மா மாமா மாமி மச்சான்மார் மச்சாள்மார் ஜேர்மனியில் வசிக்கும் பெரிய அண்ணா தர்ஷன் கஸ்தூரி, மருமக்கள் ஹரீஸ்,ஆதீஸ் ஜேர்மனியில் வசிக்கும் அன்பு அக்கா அத்தான் பிரபா கலைச்செல்வி பெறாமக்கள் கபின்ஷா சேயோன் அபிராமி மற்றும் லண்டனில் வசிக்கும் அக்கா அத்தான் இளங்கோ பிரியதர்ஷினி பெறாமகன் சைலஸ் ஜேர்மனியில் வசிக்கும் ஜோன்சன் அண்ணா மற்றும் ரஞ்சினி மாமி குடும்பம் தாயகத்தில் வசிக்கும் மாமா மாமி குடும்பம் மச்சான்மார் மச்சாள்மார் தாயகம் சுழிபுரத்தில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா குடும்பம் அண்ணாமார் அண்ணிமார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

 புதுமணத் தம்பதிகள் ராஜ்குமார் அகிலா இருவரும் பதினாறு செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் சீரோடும் சிறப்போடும் வாழ வேண்டுமென தமிழ் ஒலியில் பணி புரியும் அனைவரும் அன்பு நேயர்களும் வாழ்த்துகின்றார்கள்.
 
இன்றைய அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார் திருமதி.குகா அவர்கள்.
அவருக்கும் எமது இதயபூர்வமான நன்றி