திருமண வாழ்த்து – ரதீஸ்குமார் & ஜானுஜா (30/03/2018)
ஜேர்மனி Castrop நகரில் வசிக்கும் ரகுநாதன் ஞானகுமாரி தம்பதிகளின் செல்வப்புதல்வன் ரதீஸ்குமார் அவர்களும் ஜேர்மனி Bürgstadt இல் வசிக்கும் தர்மசீலன் ஜெயராணி தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜானுஜா அவர்களும் 30ம் திகதி மார்ச் மாதம் வெள்ளிக்கிழமை இன்று Schwerte ஸ்ரீ கனகதுர்கா அம்பாள் ஆலயத்தில் அபிராமி அன்னையின் ஆசியுடன் திருமண பந்தத்தில் இணைந்து கொள்கிறார்கள்.
இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட ரதீஸ்குமார் ஜானுஜா தம்பதிகளை அன்பு அப்பா,அம்மா,மாமி,ஜெர்மனியில் வசிக்கும் தினேஷ் அண்ணா குடும்பம், பிரதீஸ் அண்ணா குடும்பம், தம்பி சுரேஷ்,மச்சாள்மார் குடும்பம், ஜேர்மனியில் வசிக்கும் வரன் ஆசையப்பா குடும்பம், நித்தி சித்தப்பா குடும்பம், சீலன் சித்தப்பா குடும்பம்,ஜெர்மனி Mannheim இல் வசிக்கும் சித்தப்பா குடும்பத்தினர் , சுவிஸில் வசிக்கும் வாணி சித்தி குடும்பம்,ரோகிணி சித்தி குடும்பம்,கனடாவில் வசிக்கும் மமது சித்தப்பா குடும்பம், லண்டனில் வசிக்கும் நிறைஜா குடும்பம், மற்றும் தாயகத்தில் வசிக்கும் ஜெயந்தி பெரியம்மா குடும்பத்தினர், கதிர் மாமா குடும்பத்தினர், சத்தியசீலன் பெரியப்பா குடும்பத்தினர், சோதி பெரியம்மா குடும்பம்,பேபி சித்தி குடும்பம், தேவி மாமி குடும்பம்,வரதன் மாமா குடும்பம், பாரிஸில் வசிக்கும் ரஞ்சன் மாமா குடும்பத்தினர், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அபிராமி உபாசகி திருவருளோடு பதினாறு செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று திருமண பந்தத்தில் இணைந்த புதுமணத்தம்பதிகள் ரதீஸ்குமார் ஜானுஜா தம்பதிகளை TRTதமிழ் ஒலி குடும்பமும் மனதார வாழ்த்துவதில் மகிழ்வடைகிறோம்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் எமது அன்பு நேயர்கள் சிவசுந்தரலிங்கம் தம்பதிகள் அவர்களின் பிள்ளைச்செல்வங்கள் விதுஷா,வினோதா,டட்க்ஷிகா
அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.
பகிரவும்...