திருமண வாழ்த்து – சாரங்கன் & தர்சி (01/11/2021)
தாயகத்தில் எழுவைதீவை சேர்ந்த Germany கையில்புரோனில் வசிக்கும் இராசரட்ணம் பத்மராணி தம்பதிகளின் செல்வ புதல்வன் சாரங்கன் அவர்களும் தாயகத்தில் காங்கேசன்துறையை சேர்ந்த Germany டெற்றிங்கனில் வசிக்கும் காங்கேயமூர்த்தி வஜந்தி தம்பதிகளின் செல்வ புதல்வி தர்சி அவர்களும் கடந்த 30 ஆம் திகதி அக்டோபர் மாதம் சனிக்கிழமை
திருமண பந்தத்தில் இணைந்துள்ளாரகள்.
கடந்த 30 ஆம் திகதி திருமண பந்தத்தில் இணைந்த சாரங்கன் & தர்சி தம்பதிகளை அன்பு அப்பா, அன்பு அம்மா, மாமா,மாமி, அண்ணன் மயூரன், அண்ணி ஸ்ரெபி, கனடாவில் வசிக்கும் சுரேந்திரராஜா மாமா குடும்பம், ஜேர்மனியில் வசிக்கும் தர்மரட்ணம் சித்தப்பா குடும்பம், ஜேர்மனியில் வசிக்கும் நடேசலிங்கம் மாமா குடும்பம், ஜேர்மனியில் வசிக்கும் ஜெகநாதன் பெரியப்பா குடும்பம் , கனடாவில் வசிக்கும் யோகேஸ்வரன் மாமா குடும்பம், கனடாவில் வசிக்கும் ஜெகதீஸ்வரன் மாமா குடும்பம், கனடாவில் வசிக்கும் கமலநாதன் சித்தப்பா குடும்பம், மற்றும் அக்காமார், அத்தான்மார், தங்கைமார், தம்பிமார், அண்ணாமார், அண்ணிமார், மச்சான்மார், மச்சாள்மார்,உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் சகல சௌபாக்கியங்களும் பெற்று பல்லாணடு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
திருமண பந்தத்தில் இணைந்த சாரங்கன் & தர்சி தம்பதிகளை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார், மாமாமார், அன்பு நேயர்கள் அனைவரும் 16 செல்வங்களும் பெற்று பார்போற்றும் தம்பதிகளாக வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் எமது தமிழ் ஒலி அன்பு நேயர்களான இராசரட்ணம் பத்மராணி குடும்பத்தினர்.
அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.