ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கு நீதிக் கோரும் ஆர்ப்பாட்டங்களுக்கு பிரான்ஸில் தடை!
அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கு நீதிக் கோரும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு, பிரான்ஸில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக இன்று (சனிக்கிழமை) தலைநகர் பரிஸில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக இரண்டு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற இருந்தன.
பரிஸில் இரு அமைப்புக்கள் அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள அழைப்பு விடுத்திருந்தன.
ஆனால், சுகாதார நிலமைகளை கருத்தில் கொண்டு இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு பரிஸ் பொலிஸ் தலைமைச் செயலகம் இதற்கு தடை விதித்துள்ளது.
பத்து பேருக்கு மேல் கூடுவதற்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பகிரவும்... ஸ்பெயினில் கொவிட்-19 தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் ஒருவர் மட்டுமே உயிரிழப்பு! முந்தைய செய்திகள்
மேலும் படிக்க ஈரானில் சிறையில் அடைக்கப்பட்ட அமெரிக்க கடற்படை வீரர் விடுதலை: ட்ரம்ப் ஈரானுக்கு நன்றி!