Main Menu

ஸ்பெயினில் கொவிட்-19 தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் ஒருவர் மட்டுமே உயிரிழப்பு!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் மிகப்பெரிய இழப்பினை சந்தித்திருந்த ஸ்பெயின் தற்போது, தொற்று பரவலை சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ளது. இதனை அண்மைய புள்ளிவிபரங்கள் நிரூபிக்கின்றன.

ஒரு மாதத்திற்கு முன்பு ஸ்பெயின் ஒவ்வொரு நாளும் 1,000 இற்க்கும் மேற்பட்ட புதிய வைரஸ் தொற்றுகளையும், நூற்றுக்கணக்கான இறப்புகளையும் பதிவு செய்து கொண்டிருந்தது. ஆனால் தற்போது பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

இந்தநிலையில், ஐரோப்பாவில் மிக மோசமான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பை எதிர்கொண்ட ஸ்பெயினில், கடந்த 24 மணித்தியாலத்தில் 318பேர் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டதோடு, ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய ஸ்பெயினில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 288,058ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27,134ஆக அதிகரித்துள்ளது.

பகிரவும்...